கோழி வறுத்த கறி
கோழி வறுத்த கறிகோழி தேவையான பொருள்கள் கோழிக்கறி - 1 1/2 கிலோ இஞ்சி விழுது - 3 மேசைக்கரண்டி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 120 மி.லி. வெங்காயம் - ஒரு கப் தக்காளி - அரை கப் மல்லித்தூள் - அரைத் தேக்கரண்டி மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி கிராம்பு - 2 பட்டை - சிறுதுண்டு புளி - சிறு நெல்லிக்காய் அளவு மிளகு - ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு - ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழை - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை கோழிக்கறியினைச் சுத்தம் செய்து ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி விழுது மற்றும் பூண்டு விழுதிலிருந்து பாதி எடுத்துக் கொண்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு கறிகளின் மீது பூசி சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியைப் போட்டு மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். கறித்துண்டுகளை தனியே எடுத்து வைத்து, எண்ணெயைத் தனியே வடித்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியா...